இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் விநியோகம் செய்யும் நாடு
April 25 , 2023 752 days 409 0
பிப்ரவரி மாதத்தில், ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் என்ற மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பு விதிக்கப்பட்டிருந்த போதிலும், மதிப்பின் அடிப்படையில் இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா திகழ்கிறது.
பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மதிப்பு 3.35 பில்லியன் டாலராக இருந்தது.
அதைத் தொடர்ந்து 2.30 பில்லியன் டாலர் மதிப்புடன் சவுதி அரேபியா மற்றும் 2.03 பில்லியன் டாலர் மதிப்புடன் ஈராக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய நாட்டின் எண்ணெய் இறக்குமதியானது 27 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெயினை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியது.