இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ரயில் பாதைத் திட்டம்
February 9 , 2020 2103 days 728 0
இந்தியாவில் உள்ள அகர்தலா (திரிபுரா) – வங்கதேசத்தில் உள்ள அகௌரா ஆகியவற்றிற்கு இடையே 15.6 கி.மீ நீளமுள்ள ரயில் பாதைத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைய இருக்கின்றது.
இந்த ரயில் பாதைகளானது இந்திய ரயில்வே மற்றும் வங்கதேச ரயில்வே ஆகியவற்றிற்கு இடையே இணைப்பை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க இருக்கின்றன.
இந்தத் திட்டமானது 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கதேசப் பிரதமரான ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது தொடங்கப்பட்டது.
இந்தியப் பகுதியில் 5.46 கி.மீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதையை அமைப்பதற்கான செலவை மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது (Ministry of Development of North Eastern Region - DoNER) ஏற்கின்றது.
வங்கதேசப் பகுதியில் 10.6 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதையை அமைப்பதற்கான செலவானது இந்திய அரசின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.