சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி (ISA) ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் பல்வேறு நாடுகளில் சோதனை, ஆய்வகப் பயிற்சி மற்றும் புத்தொழில் சூழல் அமைப்புகளை வழங்குகின்ற 17 சிறப்பு மையங்களை நிறுவ உள்ளது.
"சூரிய சக்திக்கான சிலிக்கான் பள்ளத்தாக்கு" பகுதியைப் போலவே, இந்த மையங்களை இணைக்கும் ஒரு முக்கிய மையமாக செயல்படுவதற்காக இந்தியாவில் ஓர் உலகளாவிய திறன் மையத்தை உருவாக்க ISA திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி அதன் புதைபடிவம் சாரா மின் உற்பத்தித் திறனில் 48% சூரிய சக்தி ஆக உள்ளதுடன், இந்தியா சுமார் 119 GW சூரிய சக்தியை நிறுவியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி முதலீடுகளில் 1 டிரில்லியன் டாலர் திரட்டுவதற்கும், இந்தியாவிலிருந்து மனித மூலதனத்தைப் பயன்படுத்தி உலகளாவிய சூரிய சக்தி ஏற்பினை ISA இலக்காக நிர்ணயித்துள்ளது.