TNPSC Thervupettagam

இந்தியாவில் IUCN செந்நிறப் பட்டியல் மதிப்பீடு

October 22 , 2026 14 hrs 0 min 23 0
  • IUCN கட்டமைப்பின் கீழ், இந்தியாவில் வசிக்கும் மற்றும் வலசை போகும் பறவைகள் உட்பட 1,211 பறவை இனங்களை இந்தியா மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI), IUCN SSC சென்டர் ஃபார் ஸ்பீசிஸ் சர்வைவல் இந்தியா-வைல்டு லைப் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் ஸ்டேட் ஆஃப் இந்தியாஸ் பேர்ட்ஸ் (State of India’s Birds) முன்னெடுப்பு ஆகியவற்றால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் 107 சிற்றினங்களின் ஆரம்ப மதிப்பீடுகள் முடிக்கப்பட்டுள்ளன; அனைத்து இனங்கள் மீதான பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்றும், இறுதி மதிப்பீடுகள் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • ஆரம்ப மதிப்பீடுகளில் கானமயில் (Great Indian Bustard) 'மிக அருகி வரும் இனம்' (Critically Endangered) என்றும், சாரஸ் கொக்கு (Sarus Crane) எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்' (Vulnerable) என்றும், மார்பிள்டு/பளிங்கு வாத்து (Marbled Duck) 'அருகி வரும் இனம்' (Endangered) என்றும் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பிரிவுகள் இறுதியானவை அல்ல.
  • IUCN செந்நிறப் பட்டியல் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவின் தேசிய செந்நிறப் பட்டியல் வழிகாட்டி வரைபடம் மற்றும் தொலைநோக்கு 2025-2030 (National Red List Roadmap and Vision 2025–2030) திட்டமானது 2030 ஆம் ஆண்டிற்குள் 11,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சை இனங்களை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்