இந்தியாவில் MSME நிறுவனங்களின் போட்டித் தன்மையை மேம்படுத்துதல்
May 7 , 2025 113 days 121 0
நிதி ஆயோக் அமைப்பானது, போட்டித்திறன் நிறுவனத்துடன் (IFC) இணைந்து "இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் (MSME) போட்டித் தன்மையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான ஒரு மிகவும் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் பெறும் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் பங்கு 14 சதவீதத்திலிருந்து 20% ஆக உயர்ந்தது.
இதில் நடுத்தர நிறுவனங்களின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 9% ஆக உயர்ந்தன.
MSME நிறுவனங்களின் கடன் தேவையில் சுமார் 19% மட்டுமே 2021 ஆம் ஆண்டிற்குள் முறையான வழிகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், தோராயமாக 80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அவற்றின் தேவை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.