TNPSC Thervupettagam

இந்தியாவில் SAF விமான இயக்கம்

September 15 , 2026 13 hrs 0 min 7 0
  • அகாசா ஏர் (Akasa Air) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (BPCL) ஆகியவை இணைந்து, வழக்கமான விமான எரிபொருளுடன் 1% நிலையான விமான எரிபொருளைக் (SAF) கலந்து இந்தியாவின் முதல் வர்த்தக விமானத்தை இயக்கி ள்ளன.
  • இவ்விமானம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவின் மனோஹர் சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப் பட்டது.
  • விமானப் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் 5% SAF எரிபொருள் கலவையை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • SAF என்பது நிலையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட விமான எரிபொருளாகும்; இதன் பரவலான பயன்பாடு இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்