TNPSC Thervupettagam

இந்தியாவில் அடிப்படை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனம்

February 10 , 2026 5 days 50 0
  • இந்திய அரசாங்கம் ‘அடிப்படை தொழில்நுட்பம்’ (Deep Tech) புத்தொழில் நிறுவனங்களுக்கான அதிகாரப்பூர்வ வரையறையை வெளியிட்டுள்ளது.
  • தொழில்துறை மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) படி, ஒரு அடிப்படை தொழில்நுட்ப புத்தொழில் என்பவை அறிவியல் அல்லது பொறியியலில் உள்ள புதிய யோசனைகள் அல்லது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தீர்வுகளை உருவாக்குகிறது.
  • இத்தகைய புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் நிதியில் பெரும்பகுதியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக (R&D) செலவிடுவதுடன் குறிப்பிடத்தக்க அறிவுசார் சொத்துக்களை (IP) உருவாக்குகின்றன, மேலும் அவற்றை வணிகமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன.
  • இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் நீண்ட துவக்கநிலை உருவாக்க காலங்கள், அதிக மூலதனத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப நிச்சயமற்ற தன்மையை எதிர் கொள்கின்றன.
  • ஒரு நிறுவனம் 20 ஆண்டுகள் வரையிலும், ₹300 கோடி வரையிலான வருவாய் ஈட்டும் வரையிலும் அடிப்படை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனமாக கருதப்படலாம்.
  • நிறுவனங்கள் சான்றிதழுக்காக DPIIT-க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில் இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு பல்துறை அமைச்சக வாரியத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
  • இந்த முன்முயற்சியானது, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மீதான அரசாங்கத்தின் கவனத்திற்கு ஆதரவளிக்கிறது மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு நிதியளிப்பதற்காக என்று உருவாக்கப்பட்ட 1 லட்சம் கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புத்தாக்க (RDI) நிதியத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்