இந்தியாவில் அதிவிரைவாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள் நிறுவனம்
August 3 , 2022 1115 days 484 0
ரொட்டித் தயாரிப்பு நிறுவனமான ‘பார்லே’ 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதி விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
இது தொடர்ந்து பதினொன்றாவது ஆண்டாகத் தரவரிசையின் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
அமுல், பிரிட்டானியா, கிளினிக் பிளஸ் மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புகள் ஆகியவை பட்டியலில் உள்ள மற்ற சிறந்தத் தயாரிப்புகள் ஆகும்.
இது காந்தார் இந்தியா மேற்கொண்ட வருடாந்திரத் தயாரிப்புப் பொருள் தடம் பதிப்பு ஆய்வினால் வெளியிடப்பட்டது.
நுகர்வோரைச் சென்றடையும் புள்ளிகளின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டில் நுகர்வோர் தேர்ந்தெடுக்கும் அதிவிரைவாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள் தயாரிப்புகளை இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.