இந்தியாவில் அந்நியத் தொகுப்பு முதலீடுகள் மேற்கொள்வதற்கான விருப்ப மிகு நாடுகள்
July 17 , 2024 420 days 413 0
முதலீட்டிற்கான ஆதாரங்களாக வைக்கப்படும் பல சொத்துகளின் அடிப்படையில் அயர்லாந்திற்கு அடுத்த நிலையில் மொரீஷியஸ் தற்போது ஐந்தாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் (FPIs) நிதிகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முன்னணி இடங்களில் மொரீஷியஸ் நாடும் ஒன்றாகும்.
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அந்நியத் தொகுப்பு முதலீடுகளுக்கான ஆதாரங்களாக வைக்கப்படும் சொத்துகளில் 26 சதவீத அதிகரிப்பு அயர்லாந்து நாட்டில் பதிவாகியுள்ளது.
ஒட்டு மொத்தமாக, மொரீஷியஸில் 595 அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதை ஒப்பிடும் போது, அயர்லாந்தில் 780க்கும் அதிகமான அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மார்ச் மாதத்தில், மொரீஷியஸ் மற்றும் இந்திய அரசாங்கங்கள் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தினை (DTAA) திருத்தியமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.