2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கையானது 50000 என்ற அளவினைத் தொட்டது.
கல்வி அமைச்சகத்தின் கணக்கெடுப்பின் படி, 2018-19 ஆம் அண்டில் 47,427 ஆகக் கணக்கிடப் பட்ட மொத்த அயல்நாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட 2019-20 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கையானது சற்று உயர்ந்து 49,348 ஆக உள்ளது.
2,00,000 அயல்நாட்டு மாணாக்கர்கள் எனும் ஒரு இலக்குடன் அயல்நாட்டு மாணாக்கர்களை ஈர்க்கும் ஓர் இடமாகத் திகழ வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளை அடைவதிலிருந்து அது வெகுதொலைவில் உள்ளது என்பதை இது குறிக்கிறது.
இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களில் அதிக அளவில் உள்ளவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நேபாளம் – 28.1%
ஆப்கானிஸ்தான் – 9.1%
வங்காள தேசம் – 4.6% மற்றும்
பூடான் – 3.8%
மாநிலங்கள் அளவில் கர்நாடகாவில் அதிகளவு அயல்நாட்டு மாணாக்கர்கள் (10,231) உள்ளனர்.