2019 ஆம் ஆண்டின் சர்வதேசப் புத்தாக்கக் குறியீடு வெளியிடுதலின் போது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி செலவினச் சூழல் அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஒரு சிறப்புக் கூட்டம் புது தில்லியில் நடத்தப் பட்டது.
இந்த அறிக்கையானது பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவினால் தொகுக்கப்பட்டது.
இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% முதல் 0.7% வரையிலான மிகக் குறைந்த அளவிலேயே இந்தியா முதலீடு செய்கின்றது.
அமெரிக்கா (2.8), சீனா (2.1), இஸ்ரேல் (4.3) மற்றும் கொரியா (4.2) போன்ற நாடுகளின் செலவினங்களை விட இது குறைவானதாகும்.