"இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் விதிகள், 2025" ஆனது மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால் உள்ள EEZ (~2.3 மில்லியன் சதுர கி.மீ) இந்தியக் கப்பல்களால் மேற்கொள்ளப்படும் மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடித்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
EEZ மண்டலத்தில் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் பெரிய அளவிலான மோட்டார் பொருத்தப்பட்ட கப்பல்கள் ReALCRaft வலை தளம் வழியாக இயங்கலையில் அணுகல் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும்.
வழக்கமான மற்றும் சிறிய அளவிலான மீனவர்கள் அணுகல் அனுமதிச் சீட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்திய மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மீன் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FFPOs) முன்னுரிமை அளித்து, வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இந்தியாவின் EEZ மண்டலத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் மேம்பட்ட கப்பல்கள் மற்றும் "முதன்மை மற்றும் இரண்டாம் நிலை படகு" (mother-and-child vessel) மாதிரியைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்கின்றன.
LED விளக்குகளை கொண்டு மீன்பிடித்தல், இரட்டை மடி இழுவை மீன்பிடித்தல் மற்றும் பெருமளவிலான இழுவை மீன்பிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் மீன்பிடி நடைமுறைகள் தடை செய்யப் பட்டுள்ளன என்பதோடுமேலும் EEZ மண்டலத்தில் பிடிக்கப் படும் மீன்கள் சுங்க விதிமுறைகளின் கீழ் "இந்தியாவில் தோன்றியதாக" என்று அங்கீகரிக்கப் படும்.