இந்திய இணையம் மற்றும் கைபேசி கூட்டமைப்பானது, "இந்தியாவில் இணையம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
சுமார் 346 மில்லியன் இந்தியர்கள் எண்ணிம முறையிலான பணம் செலுத்துதல் மற்றும் இணைய வர்த்தகம் உள்ளிட்ட நிகழ்நேரப் பரிவர்த்தனைகளை மேற் கொள்ளச் செய்கின்றனர்.
எண்ணிமப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 331 மில்லியனாக இருக்கும் அமெரிக்க நாட்டினை அந்த எண்ணிக்கையில் இந்தியா விஞ்சியுள்ளது.
உலகளவில் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றானது எண்ணிமப் பரிவர்த்தனைகளை 51% அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், 230 மில்லியன் மக்கள் எண்ணிமப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது, நாட்டில் 692 மில்லியன் மக்கள் இணையப் பயனர்களாக உள்ளனர்.
351 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்தும், 341 பேர் நகர்ப்புறங்களிலிருந்தும் இணையப் பயனர்களாக உள்ளனர்.