இந்த அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் 52% அல்லது 759 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இணைய வசதியினை அணுகுகிறார்கள்.
அவர்களில், 399 மில்லியன் பேர் கிராமப்புறங்களையும், 360 மில்லியன் பேர் நகர்ப் புறங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
2022 ஆம் ஆண்டில் தோராயமாக 71% இணைய வசதி ஊடுருவலானது 6% வளர்ச்சியைக் கண்டது.
பீகார் (32%) மாநிலமானது, முன்னணி மாநிலமான கோவாவை விட (70%) இணைய வசதி ஊடுருவலின் அளவில் பாதி அளவினைக் கொண்டுள்ளது.
செயலில் உள்ள இணையப் பயனர்களில் 54% ஆண் பயனர்களாக உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் பதிவான அனைத்துப் புதியப் பயனர்களில் 57% பெண்கள் ஆவர்.
2025 ஆம் ஆண்டிற்குள், பதிவு செய்யப்பட உள்ள புதியப் பயனர்களில் 65% பேர் பெண்களாக இருப்பார்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட எண்ணிமப் பண வழங்கீடானது, 2021 ஆம் ஆண்டினை விட 13% அதிகரித்து 338 மில்லியன் பயனர்களை எட்டியது.