இந்தியாவில் உருவாக்குவோம் ('Made in India') – மைக்ரோசாப்ட் வழங்கும் 'கைசாலா' செயலி
July 27 , 2017 3039 days 1372 0
வணிக நிறுவனங்களின் உற்பத்தியினை பெருக்கவும் ,நிறுவன இயக்கங்களை மேம்படுத்தவும் , மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் 'கைசாலா' என்ற செயலியை உருவாக்கியுள்ளது . இந்தச் செயலி குழு தொடர்பு மற்றும் பணி நிர்வாகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர இடங்களிலும் 2G இணையதள சேவையைக் கொண்டு இயங்கும் சிறப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'கைசாலா’ செயலியைப் பயன்படுத்தி நிறுவனங்களுக்கு உள்ளே அல்லது வெளியே இருக்கும் கணினி மற்றும்கைப்பேசி பயன்பாட்டாளர்களை ஒருங்கிணைக்க முடியும்.
கைபேசிசெய்திப் பரிமாற்றம், மற்றும் கணினி வழிச் செய்திப் பரிமாற்றம் என்ற இருவேறு உலகுக்கும் இருக்கும் இடைவெளியை இணைக்க 'கைசாலா' செயலி முற்படுகிறது.