2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 18,900 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பதிவாகியுள்ளன.
உலகளவிலான மொத்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உயிருள்ள போதே உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கொண்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கை மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா தற்போது உலகிலேயே முன்னணியில் உள்ளது.
“அங்தான் - ஜீவன் சஞ்சீவானி அபியான்” திட்டத்தின் கீழ், இந்தியா ஒவ்வொரு ஜூலை மாதமும் உறுப்பு தான மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.
இந்தியா ஒரு மில்லியன் மக்கள்தொகையில் 1 என்ற அளவிற்கும் குறைவான அளவில் இறந்தவர்களின் உறுப்பு தான விகிதத்தை கொண்டுள்ளது.
ஸ்பெயினில் இது ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 48 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையானது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 என்ற ஒரு சட்டத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது.
இது 2011 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான சடல உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது
2024 ஆம் ஆண்டில் 268 சடல உறுப்பு தானங்களைப் பதிவு செய்ததற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கி அங்கீகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 146 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 122 பேரும் உறுப்பு தானம் மேற்கொண்டனர்.
இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கையானது, 2008 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் உறுப்பு தானத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இம்மாநிலத்தின் அதிகபட்ச வருடாந்திர மொத்தப் பதிவு ஆகும்.
2024 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானத்தில் புதுச்சேரி முன்னணி ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
சடல உறுப்பு தான விகிதத்தை அதிகமாகக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கும் அங்கீகாரமளிக்கப்பட்டது.