- இந்தியாவில் உள்ள இளம் குழந்தைகளின் நிலை என்ற ஓர் அறிக்கையானது “மொபைல் கிரேச்செஸ்” என்ற ஓர் அரசு சாரா நிறுவனத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
- இளம் குழந்தைகளின் முன்னேற்றக் குறியீடு மற்றும் இளம் குழந்தைகள் சூழலமைப்புக் குறியீடு ஆகியவை இந்த அறிக்கையின் பகுதிகளாகும்.

இளம் குழந்தைகளின் முன்னேற்றக் குறியீடு
- கேரளா, கோவா, திரிபுரா, தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகியவை குழந்தைகள் நலனில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்களாகும்.
- அசாம், மேகாலயா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை தேசிய சராசரியை விட குறைவான மதிப்பெண்களைக் கொண்டுள்ளன.
இளம் குழந்தைகளின் சூழலியல் குறியீடு
- கேரளா, கோவா, சிக்கிம், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
- சராசரியை விட குறைவான மதிப்பெண்களுடன் இருக்கும் 8 மாநிலங்கள் இதில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன.
