இந்தியாவில் உள்ள குழந்தைகள் குறித்த “குழந்தைகள் உரிமைகள் மற்றும் நீங்கள்” என்ற அமைப்பின் அறிக்கை
December 8 , 2019 2067 days 606 0
“குழந்தைகள் உரிமைகள் மற்றும் நீங்கள்” என்ற அமைப்பானது சமீபத்தில் “இந்தியாவில் உள்ள குழந்தைகள் குற்றத்திற்கு எவ்வாறு ஆளாகின்றார்கள்?” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது 2016-17 ஆம் ஆண்டிற்கான தேசியக் குற்றப் பதிவு அமைப்பின் ஆய்வின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதலிடங்களில் உள்ளன என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் குற்றங்களின் அதிகரிப்பானது ஜார்க்கண்டில் நிகழ்ந்துள்ளது.