இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலை குறித்த (SOIB) அறிக்கை 2023
October 7 , 2023 651 days 393 0
தமிழ்நாட்டில் பதிவாகிய சுமார் 110 வகையான பறவை இனங்கள் தற்போது இந்தியா அளவிலான பரவலில் மிகப்பெரியதொரு வீழ்ச்சியை எதிர்கொண்டு வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
சேலம் பறவையியல் அறக்கட்டளையானது (SOF) தமிழ்நாடு சார்ந்து மேற்கொள்ளப் பட்ட இந்த அறிக்கை இத்தகவலினை எடுத்துரைத்துள்ளது.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட சுமார் 1,350 பறவை இனங்களில் 942 இனங்களின் நீண்ட கால மற்றும் தற்போதையப் போக்குகள், பரவல் மற்றும் ஒட்டு மொத்தப் பாதுகாப்பு நிலை ஆகியவற்றை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
eBird தளத்தில் 30,000க்கும் மேற்பட்ட பறவைக் கண்காணிப்பாளர்களால் வழங்கப்பட்ட 30 மில்லியனுக்கும் அதிகமான பறவைக் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.