இந்தியாவில், 2017–18 ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு ஆனது 2023–24 ஆம் ஆண்டில் தோராயமாக 42 சதவீதமாக உயர்ந்தது.
உலக வங்கி தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளிடையே பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பில் இந்தியா மிக உயர்ந்த அதிகரிப்பைப் பதிவு செய்து உள்ளது.
பெண்களுக்குத் திறன்கள், கடன் மற்றும் முறையான வேலைவாய்ப்புக்கான அணுகலை மேம்படுத்தும் கொள்கை நடவடிக்கைகளே இந்த உயர்வுக்குக் காரணம் ஆகும்.
அரசாங்க முன்னெடுப்புகளில் 730 நாட்கள் அளவிலான குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, 180 நாட்கள் அளவிலான மகப்பேறு விடுப்பு மற்றும் அரசுப் பணியில் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஒரே இடத்தில் பணி நியமனம் ஆகியவை அடங்கும்.
அரசு வேலைகளில் அதிக பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதற்காக போட்டித் தேர்வுகளுக்கான கட்டணத்திலிருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
சட்டம், மருத்துவம், ஆலோசனை மற்றும் தங்குமிடச் சேவைகளை வழங்குகின்ற ஒற்றைத் தீர்வு மையங்கள் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குகிறது.