TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய அறிக்கை 2022

March 22 , 2023 817 days 360 0
  • இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள்) 2036 ஆம் ஆண்டிற்குள் 952 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2017-19 ஆம் ஆண்டில் 904 ஆக இருந்த குழந்தை பிறப்பின் போதான பாலின விகிதம் ஆனது 2018-20 ஆம் ஆண்டில் மூன்று புள்ளிகள் உயர்ந்து 907 ஆக உயர்ந்துள்ளது.
  • 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆனது 2017-2018 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 77.2 ஆகவும், பெண்களுக்கு 32.8 ஆகவும் இருந்தது.
  • 1971 ஆம் ஆண்டில் 2.2% ஆக இருந்த மக்கள்தொகை வளர்ச்சியானது 2021 ஆம் ஆண்டில் 1.1% ஆக குறைந்து சரிவினை எதிர்கொள்ளும் போக்கில் உள்ளது.
  • இது 2036 ஆம் ஆண்டில் மேலும் 0.58% ஆக குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 20-24 வயது மற்றும் 25-29 வயதுப் பிரிவினருக்கான வயது சார்ந்த கருவுறுதல் விகிதம் ஆனது முறையே 135.4 மற்றும் 166.0 என்ற அளவிலிருந்து 113.6 மற்றும் 139.6 ஆகக் குறைந்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் 32.7 ஆக இருந்த 35-39 வயதுப் பிரிவினருக்கான அதே குறி காட்டியானது 2020 ஆம் ஆண்டில் 35.6 ஆக அதிகரித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் 22.1 வயதாக இருந்த திருமணத்திற்கான சராசரி வயது ஆனது 2020 ஆம் ஆண்டில் 22.7 வயதாக சற்று உயர்ந்துள்ளது.
  • 2036 ஆம் ஆண்டில், 15 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை குறையும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்