TNPSC Thervupettagam

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் சரிவு 2017/21

May 12 , 2025 17 hrs 0 min 20 0
  • இந்தியாவின் பிறப்பின் போது எதிர்பார்க்கப் படும் ஆயுட்காலம் ஆனது ஓராண்டில் 0.2 ஆண்டுகள் சரிவு பதிவாகியதுடன், 50 ஆண்டுகளில் முதல்முறையாகக் குறைந்து உள்ளது.
  • 2016-2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலமானது 69.8 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், அதே காலக் கட்டத்தில் எதிர்பார்க்கப் படும் ஆயுட்காலம் முறையே 0.1 ஆண்டுகள் மற்றும் 0.3 ஆண்டுகள் குறைந்துள்ளது.
  • பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் ஆனது டெல்லியில் ஆண்களுக்கு 73 ஆண்டுகளாகவும், கேரளாவில் பெண்களுக்கு 77.9 ஆண்டுகளாகவும் என அதிகமாகப் பதிவாகியுள்ளது.
  • மிகக் குறைந்த எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் ஆனது சத்தீஸ்கரில் ஆண்களுக்கு 62.8 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 66.4 ஆண்டுகளாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்