இந்தியாவில் எத்தனால் கலப்பு
January 20 , 2021
1580 days
1688
- 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப் படும் ஒரு இலக்கை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது.
- இது அதன் முந்தைய இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இருக்கும்.
- இது விலை உயர்ந்த கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும்.
- 2020 ஆம் ஆண்டின் இலக்கின் படி 2022 ஆம் ஆண்டில் 10% எத்தனால் கலப்பதை எட்ட வேண்டும் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தது.
- இதன் பொருள் 90% பெட்ரோலுடன் 10% எத்தனால் கலப்பு என்பதோடு மேலும் 20% கலப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் எட்டுதல் என்பதாகும்.
- 80%க்கும் அதிகமான அளவில் தனது கச்சா எண்ணெய்யின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா வெளிநாட்டு வழங்குநர்களை நம்பியுள்ளது.

Post Views:
1688