ஒரு புதிய IUCN அறிக்கையானது இந்தியாவில் டுகோங் (கடல் பசுக்கள்) அச்சுறுத்தல்கள் இருப்பதை எடுத்துக்கா ட்டுகிறது.
இந்தியாவில் அவற்றின் முக்கிய வாழ்விடங்களில் கட்ச் வளைகுடா (குஜராத்), மன்னார்–பால்க் விரிகுடா (தமிழ்நாடு/இலங்கை) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவை அடங்கும்.
டுகோங் என்பது டால்பின் போன்ற வால் கொண்ட மனாட்டிகளுடன் தொடர்புடைய கடல் வாழ் பாலூட்டிகள் ஆகும்.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக பட்டியலிடப் பட்டுள்ள இது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (இந்தியா) கீழ் மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பான அட்டவணை I அந்தஸ்தைப் பெற்று உள்ளது.
டுகோங் தினமும் 30–40 கிலோகிராம் வரையிலான கடல் புற்களை உண்கின்றன என்பதால், கடல் புற்களின் ஆரோக்கியத்தைப் பேணி, கடல் சார் பல்லுயிரியலை ஆதரிக்கின்றன.
அவற்றின் எண்ணிக்கை மதிப்பீடுகள் : மன்னார்–பால்க் விரிகுடாவில் 150–200, அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் <50, கட்ச் வளைகுடாவில் <20 ஆகும்.
மீன்பிடித் தடை, வாழ்விட இழப்பு, கடலோர மாசுபாடு, அதிக கடல் கொந்தளிப்பு (நீர் குழம்புதல்) மற்றும் கன உலோகங்கள் (ஆர்சனிக், காட்மியம், குரோமியம், பாதரசம், ஈயம்) ஆகியவை இவற்றிற்கான அச்சுறுத்தல்களில் அடங்கும்.