TNPSC Thervupettagam

இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் – அறிக்கை

February 8 , 2020 1996 days 713 0
  • இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஒரு அறிக்கையானது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தினால் (National Crime Records Bureau - NCRB) வெளியிடப் பட்டுள்ளது.
  • 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான NCRBயினால் தொகுக்கப்பட்ட இந்தியாவில் வருடாந்திரக் குற்றங்கள் (Crime in India - CII) என்ற அறிக்கையிலிருந்து இந்தப் பகுப்பாய்விற்கான தரவானது எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதற்கு அடுத்து மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிகையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
  • காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையானது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்து மேற்கு வங்கம், தில்லி மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்