இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் – அறிக்கை
February 8 , 2020 2019 days 722 0
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஒரு அறிக்கையானது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தினால் (National Crime Records Bureau - NCRB) வெளியிடப் பட்டுள்ளது.
2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான NCRBயினால் தொகுக்கப்பட்ட இந்தியாவில் வருடாந்திரக் குற்றங்கள் (Crime in India - CII) என்ற அறிக்கையிலிருந்து இந்தப் பகுப்பாய்விற்கான தரவானது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதற்கு அடுத்து மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிகையிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையானது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்து மேற்கு வங்கம், தில்லி மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.