கிசான் திவாஸ் (டிசம்பர் 23, 2025) அன்று சமத்துவ மேம்பாட்டுக்கான நிறுவனங்கள் மன்றத்தினால் (FEED) 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் குறு விவசாயிகளின் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் வேளாண் குடும்பங்களில் 60–70% பங்கில் மட்டுமே இருந்தாலும், குறு விவசாயிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் வேளாண் கூட்டுறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் குறுநிலை விவசாயிகளாக வரையறுக்கப்படுகிறார்கள்.
பீகார், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கூட்டுறவு பங்கேற்பு குறிப்பாக குறைவாக இருந்தது.
கூட்டுறவு ஈடுபாட்டிற்கான தடைகளில் சிக்கலான உறுப்பினர் நடைமுறைகள், முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் (PACS) நீண்ட தூர அமைவிடம், வரையறுக்கப் பட்ட மூலதனம், சமூக விலக்கு மற்றும் பாலின இடைவெளிகள் ஆகியவை அடங்கும்.
கூட்டுறவுச் சங்கங்களை அணுகிய குறு விவசாயிகள் அதிக வீட்டு வருமானம், மேம்பட்ட வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் கடன், வேளாண் உள்ளீடுகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கான சிறந்த அணுகல் ஆகியவற்றைப் பெற்றனர்.