இந்தியாவில் குறைகடத்திகள் உற்பத்தி – வேதாந்தா நிறுவனம்
February 18 , 2022 1280 days 862 0
இந்தியாவின் முன்னணிச் சுரங்க நிறுவனமான வேதாந்தா, இந்தியாவில் குறை கடத்திகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு கூட்டு நிறுவனத்தினை உருவாக்கச் செய்வதற்காக ஹோன் ஹாய் தொழில்நுட்பக் குழுமம் (ஃபாக்ஸ்கான் எனப்படும்) என்ற தாய்வான் நாட்டு மின்னணுத் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
குறைகடத்திகள் மற்றும் திரைகள் தயாரிப்பிற்கான ரூ. 76,000 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை அரசு அறிவித்ததையடுத்து மின்னணு தயாரிப்புத் துறையில் தொடங்கப்படும் முதல் கூட்டு நிறுவனம் இதுவாகும்.
இந்தக் கூட்டு நிறுவனத்தில் மிகப் பெரும்பான்மையான பங்குகளை வேதாந்தா நிறுவனமும் சிறுபான்மையான பங்குகளை ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கொண்டு இருக்கும்.