இந்தியாவின் ஆரோக்கியமான குழந்தைகள் அதன் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.
கங்கை நதிப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்களில் இந்தியாவின் மிகக் குறைந்த ஆரோக்கியமான குழந்தைகள் உள்ளனர்.
விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பின் படி (CNNS) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37% பேர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.
இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38.4 சதவீதத்தினை விடச் சற்று குறைவாக உள்ளது.
15 முதல் 19 வயதுடைய பெண்களில் சுமார் 7% பேர் கர்ப்பம் தரிக்கத் தொடங்கி உள்ளனர்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 11% பேர் மட்டுமே பல்வேறு உணவுமுறை கலப்பு மற்றும் மாற்று முறைகளை கொண்ட குறைந்தபட்ச உணவைப் பெறுகிறார்கள்.
ஆறு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளில் 64% பேர் மட்டுமே பிரத்தியேகமாக தாய்ப்பால் பெறுகின்றனர்.
2021 ஆம் ஆண்டில் 22 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளஅறுவை சிகிச்சை வழி நடந்த பிரசவங்கள் ஆரம்பகாலத் தாய்ப்பால் வழங்கீட்டினைச் சீர்குலைத்து, குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதிக்கிறது.
ஒட்டு மொத்த குழந்தை சுகாதார தரவரிசையில் தமிழ்நாடு 11வது இடத்தில் உள்ளது.