TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைத் திருமணம்

December 30 , 2025 15 hrs 0 min 46 0
  • ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளின் (SDG) கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
  • அரசாங்கம் ஆனது பால் விவாஹ் முக்த் பாரத் அபியான் பிரச்சாரத்தைத் தொடங்கி, அதன் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான 100 நாள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
  • தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) தரவுகள், 2005-06 ஆம் ஆண்டில் 47.4% ஆக இருந்த 18 முதல் 29 வயதுடைய பெண்களிடையே குழந்தை திருமணம் ஆனது, 2019-21 ஆம் ஆண்டில் 23.3% ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • மேற்கு வங்காளம், பீகார் மற்றும் திரிபுராவில் குழந்தைத் திருமணங்கள் மிக அதிக விகிதத்தில் பதிவாகியுள்ள அதே நேரத்தில் ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், அசாம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தானிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அவை பதிவாகியுள்ளன.
  • ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து 40% பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற நிலையில் பணக்காரக் குடும்பங்களில் இருந்து 8% பேர் மட்டுமே அந்த வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  • கல்வி பெறாத பெண்களில் சுமார் 48% பேர் வயது வரும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற நிலையில் கல்வி பெற்றப் பெண்களில் சுமார் 4% பேர் மட்டுமே அவ்வாறு  திருமணங்களை செய்து கொள்கின்றனர்.
  • இதைத் தடுப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்