TNPSC Thervupettagam

இந்தியாவில் கூடுதல் தனியார் பயிற்சி முறை

August 31 , 2025 22 days 52 0
  • தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 80வது சுற்றின் ஒரு பகுதியாக கல்வி குறித்த சமீபத்திய விரிவான மாதிரி ஆய்வு (CMS) நடத்தப்பட்டது.
  • இன்றளவும் நாடு தழுவிய அளவில் அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான மாணாக்கர்கள் சேர்கின்றனர் என்ற நிலையில் இது மொத்த மாணவர் சேர்க்கையில் 55.9% ஆகும்.
  • கிராமப்புறங்களில் இருந்து, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் அரசு கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர்.
  • இதற்கு நேர்மாறாக, நகர வாழ் குழந்தைகளில் 30.1% மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.
  • 33% மாணாக்கர்கள் வகுப்பறைகள் அல்லது கூடுதல் பயிற்சி நிறுவனங்களுக்கு அப்பால் தனியார் பயிற்சியை சார்ந்துள்ளனர்.
  • "கூடுதல் தனியார் பயிற்சி" என்பது வழக்கமானப் பள்ளி நேரத்திற்கு அப்பால் மாணாக்கர்கள் மேற்கொள்ளும் கூடுதல் தனியார் பயிற்சியைக் குறிக்கிறது.
  • இந்தப் பயிற்சிகள் வகுப்பறை கற்றலை வலுப்படுத்துவது, மாணாக்கர்களைத்  தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது அல்லது அவர்களுக்கு ஒரு போட்டித்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்