TNPSC Thervupettagam

இந்தியாவில் சமத்துவமின்மை நிலை அறிக்கை

May 25 , 2022 1116 days 1124 0
  • இந்தியாவின் சமத்துவமின்மை நிலை அறிக்கையைப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) வெளியிட்டது.
  • சுகாதாரம், கல்வி, குடும்ப நிலை மற்றும் தொழிலாளர் சந்தை ஆகிய துறைகளில் உள்ள சமத்துவமின்மை பற்றியத் தகவல்களை இந்த அறிக்கை தொகுத்து வழங்குகிறது.
  • இந்த அறிக்கையானது, பொருளாதார அம்சங்கள் மற்றும் சமூக-பொருளாதார மதிப்பீடுகள் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • இதன் ஐந்து முக்கியப் பகுதிகள்: இவை வருமானப் பங்கீடு, தொழிலாளர் சந்தை மாற்றங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் குடும்ப நிலை ஆகியனவாகும்.
  • இந்த அறிக்கையானது, கீழ்க்காணும் பல்வேறு கணக்கெடுப்புகளிலிருந்துப் பெறப் பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
    • ருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS),
    • தேசியக் குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வு (NFHS) மற்றும்
    • கல்வி பிளஸ் என்ற நிலைக்கான ஒருங்கிணைந்தத் தகவல் அமைப்பு.

முக்கிய தகவல்கள்

  • இந்தியாவின் வேலையின்மை விகிதம் 4.8% (2019-20) மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் 46.8% ஆகும்.
  • நகர்ப்புறங்களில் 44.4% செல்வச் செறிவானது மிக உயரடுக்கில் உள்ள மக்களிடம் 20 சதவிகிதம் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் இது 7.1% மட்டுமே உள்ளது.
  • 2005 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1,72,608 ஆக இருந்த மொத்த சுகாதார மையங்களின் எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டில் அதிகரித்து 1,85,505 ஆக உள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில், 95 சதவிகித அளவிலான பள்ளிகளின் வளாகத்தில் செயல் பாட்டில் உள்ள கழிப்பறை வசதிகள் உள்ளன.
  • 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 3 நிலைகளிலும் மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்