இந்தியாவில் சர்க்கரையை உட்கொள்ளல் குறித்த ICMRன் அறிக்கை
January 8 , 2020 2049 days 787 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமானது (Indian Council of Medical Research - ICMR) இந்தியாவில் சர்க்கரையை உட்கொள்ளல் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ICMR, ஹைதராபாத்தில் உள்ள NIN நிறுவனம் (தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் - National Institute of Nutrition) மற்றும் ILSI (இந்திய சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் - International Life Science Institute of India) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
நாட்டில் நடத்தப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வு இதுவாகும்.
பெண்களால் ஒரு நாளைக்கு உட்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவானது 20.2 கிராம் என்றும் ஆண்களால் ஒரு நாளைக்கு உட்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவானது 18.7 கிராம் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.