TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துகள்

September 18 , 2025 27 days 58 0
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 4,80,583 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இதன் விளைவாக 1,72,890 பேர் உயிரிழந்தனர்.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 68.1% அதிக வேகம் காரணமாக ஏற்பட்டது.
  • சாலை விபத்து காரணமான மொத்த உயிரிழப்புகளில் 44% இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தொடர்பானவையாகும்.
  • தலைக் கவசம் அணியாதது 2023 ஆம் ஆண்டில் 54,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் இருக்கைப் பட்டை/சீட் பெல்ட் அணியாதது 16,025 உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.
  • சாலைகளில் உள்ள பள்ளங்களால் 5,840 விபத்துகளும் 2,161 உயிரிழப்புகளும் ஏற்பட்டன என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டை விட அதிக அதிகரிப்பைக் காட்டுகிறது.
  • சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுதல் ஆனது சாலை விபத்துகளால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 5.5% விபத்திற்குக் காரணமாகும்.
  • உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 23,652 உயிரிழப்புகளும், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் மிகக் குறைவாக 24 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
  • பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் உட்பட எளிதில் பாதிக்கப்படக் கூடிய சாலை பயனர்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்புகளில் 68% ஆகும்.
  • பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மொத்த உயிரிழப்புகளில் 66.4% ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்