2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் பெருமளவு குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில், சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டினை விட 12.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12.84 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22.84 சதவீதமும் குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்துள்ளன.
அதிகச் சாலை விபத்துகள் பதிவான முதல் 3 மாநிலங்கள்: தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகியனவாகும்.