TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறைச்சாலைப் புள்ளி விவரங்கள் அறிக்கை - 2021

September 18 , 2022 1021 days 414 0
  • தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகமானது (NCRB) சமீபத்திய அகில இந்தியச் சிறைச் சாலைப் புள்ளி விவரத்தினை வெளியிட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மொத்த சிறைச் சாலைகளில் 20.2 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் பங்கானது 2021 ஆம் ஆண்டில் 18.7% ஆகக் குறைந்துள்ளது.
  • அதே காலக்கட்டத்தில் 72.8% ஆக இருந்த இந்துக்களின் சதவீதம் 73.6% ஆக உயர்ந்து உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 3.4% ஆக இருந்த சீக்கியர்களின் சதவீதம் 4.2% ஆக அதிகரித்துள்ளது.
  • அந்தக் காலக்கட்டத்தில் 2.6% ஆக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையானது 2.5% ஆக குறைந்துள்ளது.
  • 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 19 சிறைகளில் சிறை வாசிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
  • இந்த விகிதமானது உத்தரகாண்டில் அதிகபட்சமாக 185 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 100.2 சதவீதமாகவும் இருந்தது.
  • பெரும்பாலான கைதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அதில் 25.2 சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்கள் ஆவர்.
  • 51.7 சதவீத ஒட்டு மொத்தக் குற்றவாளிகளில், 21.69 சதவீதம் பேர் பட்டியலிடப்பட்ட சாதியினரைச் சேர்ந்தவர்கள், 14.09 சதவீதம் பேர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் 15.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.
  • வழக்கு விசாரணையில் உள்ள 49 சதவீத நபர்களில், 21.08 சதவீதம் பேர் பட்டியலிடப் பட்டச் சாதியினர், 9.88 சதவீதம் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மற்றும் 18 சதவீதம் முஸ்லிம்கள் ஆவர்.
  • 56.4 சதவீதக் கைதிகளில், முஸ்லிம்கள் 27.7 சதவீதம், பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் முறையே 23.05 மற்றும் 5.62 சதவீதம் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்