TNPSC Thervupettagam

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள்

September 19 , 2022 1019 days 2436 0
  • இந்தியாவில் இருந்து முழுவதும் அழிந்து போன சிவிங்கிப் புலிகள் மீண்டும் இந்திய மண்ணில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
  • செப்டம்பர் 17 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தின் குனோ பால்பூர் தேசியப் பூங்காவில் (KPNP) உள்ள இந்திய வனவிலங்குகளுள் எட்டு சிவிங்கிப் புலிகள் பிரதமர் அவர்களால் தமது 72வது பிறந்த தினத்தின் போது விடுவிக்கப்பட்டன.
  • கடந்த காலத்தில் இந்தியா ஆசிய சிவிங்கிப் புலிகளின் தாயகமாக இருந்தாலும் 1952 ஆம் ஆண்டில் இந்த இனம் இந்தியாவில் அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.
  • 1947 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் கடைசிச் சிவிங்கிப் புலி கொல்லப் பட்டது.
  • நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டது வரலாற்றில் மிகப் பெரிய வனவிலங்கு இடமாற்றத் திட்டமாகும்.
  • குனோ தேசியப் பூங்காவானது, இந்த அழிந்து வரும் விலங்கினமான சிவிங்கிப் புலிகளுக்கான இரைகள் நிறைந்த வாழ்விடத்தினைக் கொண்டுள்ளதால் அவற்றை அறிமுகப் படுத்துவதற்கு இது உகந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்தப் பூங்காவில் சிவிங்கிப் புலிகள் காடுகளில் வேட்டையாடி உயிர் வாழுகின்ற இனங்களான இந்தியச் சிறுமான், புள்ளி மான்கள் மற்றும் புல்வாய்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் உள்ளன.
  • சிவிங்கிப் புலிகள் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு நிறப் பட்டியலின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாகக் கருதப் படுகிறது.
  • முதன்மையாக ஆப்பிரிக்கச் சவன்னா பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்ற இவை உலகம் முழுவதும் 7,000க்கும் குறைவான அளவில் மட்டுமே உள்ளன.
  • இதன் வரம்பு நமீபியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய எட்டு நாடுகளை உள்ளடக்கியது ஆகும்.
  • இந்தியாவில் 'ஆப்பிரிக்கச் சிவிங்கிப் புலிகள் அறிமுகம் திட்டம்' ஆனது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தியாவும் நமீபியக் குடியரசும் சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்