இந்தியாவில் சுகாதாரத்தின் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
April 8 , 2026 67 days 152 0
தாஸ்ரா அமைப்பினால் வெளியிடப்பட்ட “Under the Weather: India’s Climate-Health Intersections and Pathways to Resilience” என்ற புதிய அறிக்கை, இந்தியாவில் பருவநிலை மாற்றம் சுகாதார அமைப்புகளையும் நோய் பாதிப்புகளையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது.
வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் சுமார் 40% மாவட்டங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.
பருவநிலை மாற்றம் காரணமாக காலரா, ஹெபடைடிஸ் போன்ற நீர் மூலம் பரவும் நோய்களும், டெங்கு, மலேரியா போன்ற பூச்சிகள் மூலம் பரவும் நோய்களும் அதிகரித்து வருகின்றன.
வெப்ப அலைகள் நீர்ச்சத்து குறைபாடு, வெப்பத்தாக்கம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகின்றன; காற்று மாசுபாடு சுவாச நோய்களுக்கு வழி வகுக்கிறது.
ஏழைகள், கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப் படக் கூடிய பிரிவினர் இதனால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.