இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டில் உள்ள இடைவெளிகள்
November 22 , 2023 638 days 320 0
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசியின் முதல் தவணையினை 11 லட்சம் குழந்தைகள் தவறவிட்டுள்ளனர்.
தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டில் அதிக இடைவெளி உள்ள பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் 40,967 பாதிப்புகள் பதிவானதை அடுத்து, தட்டமை தொற்றுகளை எதிர்கொண்ட 37 நாடுகளில் ஒன்றாக இந்தியாவினையும் குறிப்பிடுகிறது.
தட்டம்மை என்பது பொதுவாக குழந்தைகளைப் பாதிக்கின்ற அதிகளவில் தொற்றக் கூடிய வைரஸ் தொற்று ஆகும்.
இந்த நோய்த்தொற்று ஆனது, பொதுவாக அதிக காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் முழுவதும் செந்நிற தடிப்புகளை ஏற்படுத்துகிற நிலையில் இந்தத் தீவிரமான உடல் உபாதைகள் ஆனது மரணத்திற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு இருக்கும்.