இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார குவிப்பான் (e-Dumber)
December 28 , 2018 2452 days 1380 0
இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Ltd-CIL) முதல்முறையாக உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட, சுரங்கப்பணியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் 205 டன் அளவுடைய மின்சார குவிப்பானை உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட இந்த குவிப்பானானது அரசுக்குச் சொந்தமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (Bharat Earth Movers Limited - BEML) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்திய நிலக்கரி நிறுவனமானது இந்த மின்னணு குவிப்பானை மத்தியப் பிரதேசத்தின் சிங்கரேலி மாவட்டத்தில் அம்லோஹ்ரியில் உள்ள வடக்குப் பகுதி நிலக்கரி சுரங்கத்தில் சோதனை ஓட்டத்தில் பயன்படுத்துகின்றது.
தற்போது இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு வழங்கப்படும் இயந்திரங்களில் ரஷ்யாவின் பெலாஸ், டாடா ஹிட்டாச்சி மற்றும் கேட்டர்பில்லர் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மின்னணு குவிப்பான்களே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.