இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத கவச ஆடைகள்
September 14 , 2019 2151 days 735 0
ஆடைகளை ஐரோப்பிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
360 கோண அளவில் பாதுகாப்பை வழங்கும் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தை கொண்ட நான்காவது நாடு இந்தியா ஆகும். இதற்கு முன்பு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் குண்டு துளைக்காத கவச ஆடைகளின் மீது தனது சொந்த தேசிய தரத்தைக் கொண்டுள்ளன.
பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தர நிர்ணய அமைப்பானது குண்டு துளைக்காத கவச ஆடைகளுக்கான தேசியத் தரத்தை உருவாக்கியது.
இது மிதானி, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு தளவாடத் தொழிற்சாலை ஆகிய பாதுகாப்பு சார்ந்த 2 பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.