TNPSC Thervupettagam

இந்தியாவில் தயாரிப்போம் - 3 பாதுகாப்புத் துறைத் திட்டங்கள்

October 22 , 2019 2096 days 697 0
  • பாதுகாப்புக் கொள்முதல் ஆணையமானது (Defence Acquisition Council - DAC) இந்தியத் தொழில்துறையால் பாதுகாப்புத் துறை சார்ந்த பொருள்களை இந்தியாவிலேயே வடிவமைத்து, அவற்றை மேம்படுத்தி தயாரிப்பதற்காக மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • DAC ஆனது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • இதன் மூலம், முதன்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகமானது சிக்கலான ராணுவ உபகரணங்களை இந்தியத்  தனியார் துறையால் வடிவமைக்கவும் உருவாக்கவும் தயாரிக்கவும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டங்கள் பின்வருமாறு
    • மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் (Anti-Tank Guided Missiles - ATGM).
    • டி -72 மற்றும் டி -90 பீரங்கிகளுக்கான துணை மின் அலகுகள் (Auxiliary Power Units - APUs).
    • மலை மற்றும் அதிஉயர் நிலப் பரப்புக்கான தனித்த மின்னணுப் போர் (Electronic Warfare - EW) அமைப்புகள்.
  • ATGM ஆனது ஒரு தற்காப்புப் போரில் துருப்புக்களுக்கு ‘ஏவுகணை செலுத்தப்பட்ட பின்னர் அதைக் கட்டுப்படுத்த இயலாத திறன்’ மற்றும் “முன்னிலைத் தாக்குதல் திறன்” ஆகிய திறன்களை வழங்க இருக்கின்றது.
  • EW ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research and Development Organisation - DRDO) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட இருக்கின்றது. இது இந்தியத் தொழில் துறையில் உள்ள வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பங்குதாரரால் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்