இந்தியாவில் தாய்மார்கள் இறப்பு விகிதம்
March 18 , 2022
1168 days
747
- தாய் மற்றும் குழந்தைப் பேறு ஆரோக்கியத்தில் கேரள மாநிலம் மீண்டும் முதல் இடத்தில் உள்ளது.
- நாட்டிலேயே மிகக் குறைவாக 30 என்ற அளவில் தாய்மார்கள் இறப்பு விகிதமானது இந்த மாநிலத்தில் (ஒரு லட்சம் பிறப்புகளுக்கு) பதிவாகியுள்ளது.
- 2017-19 ஆம் ஆண்டின் காலக் கட்டத்தில் இந்தியாவில் பதிவான தாய்மார்கள் இறப்பு விகிதமானது 103 ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தியத் தரவுகள் தெரிவித்துள்ளன
- இந்தியாவில் கேரளா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே தாய்மார்கள் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
- மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மோசமாகியுள்ளது.
- உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தாய்மார்கள் இறப்பு விகிதம் வெகுவாக முன்னேறியுள்ளது.
- இத்தாலி, நார்வே, போலந்து, பெலாரஸ் ஆகிய நாடுகளில் உலகிலேயே மிகக் குறைந்த அளவிலான தாய்மார்கள் இறப்பு விகிதமே பதிவாகியுள்ளது.

Post Views:
747