2020 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகின்தினை ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது.
உலகளவில், அமெரிக்கா, ரஷ்யக் கூட்டமைப்பு, உக்ரைன், இந்தியா, சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் அர்ஜென்டினா ஆகியவை தினையின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.
2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து தினையை இறக்குமதி செய்வதில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகள் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியனவாகும்.
இந்தியாவிலிருந்துத் தினை ஏற்றுமதி செய்யும் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள மற்ற ஏழு நாடுகள் லிபியா, துனிசியா, மொராக்கோ, ஐக்கிய இராஜ்ஜியம், ஏமன், ஓமன் மற்றும் அல்ஜீரியா ஆகியனவாகும்.
2020 ஆம் ஆண்டில் மொத்த உலக உற்பத்தியில் சுமார் 41 சதவீதப் பங்கைக் கொண்டு தினை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.
இந்தியா ஓர் ஆண்டிற்கு சுமார் 12 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் தினைகளை உற்பத்தி செய்கிறது.