TNPSC Thervupettagam

இந்தியாவில் தீண்டாமை வழக்குகள் 2025

July 31 , 2025 3 days 11 0
  • 1955 ஆம் ஆண்டு உரிமையியல்/குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (PCR சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட்ட "தீண்டாமை" தொடர்பான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 97 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாலும், கிட்டத்தட்ட அனைத்து விசாரிக்கப்பட்ட வழக்குகளும் விடுதலை அளிப்பதாலும் இது அதிகரித்துள்ளது.
  • இந்த அறிக்கை சமீபத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • சமூக மற்றும் மதத் துறைகள் உட்பட தீண்டாமையின் பல்வேறு வெளிப்பாடுகளை வரையறுத்து, தண்டனைகளைப் பரிந்துரைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
  • வழக்குப் பதிவு, காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களை நிறுவுதல், சாதி மறுப்புத் திருமண ஊக்கத்தொகை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் தலையீடுகளுடன் கூடிய வருடாந்திர மறுஆய்வு அறிக்கையை இது கட்டாயமாக்குகிறது.
  • தேசிய குற்றப் பதிவு வாரியத்திற்கு  (NCRB) வழங்கப்பட்டத் தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் PCR சட்டத்தின் கீழ் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் 24 ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 25 ஆகவும் இருந்தது.
  • இந்த வழக்குகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் (5), கர்நாடகா (5), மகாராஷ்டிரா (2) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
  • இதற்கு நேர்மாறாக, 1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.
  • 21 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் PCR சட்டத்தின் கீழ் 18,936 சாதி மறுப்புத் திருமண தம்பதிகளுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிதி ஊக்கத்தொகை வழங்கப் பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு அறிக்கை ஆவணப் படுத்தியுள்ளது.
  • மகாராஷ்டிரா அதிகபட்சமாக 4,100 பயனாளிகளையும், அதைத் தொடர்ந்து கர்நாடகா (3,519) மற்றும் தமிழ்நாடு (2,217) பயனாளிகளையும் பதிவு செய்துள்ளது.
  • இருப்பினும், பீகார், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பானத் தரவுகளை வழங்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்