TNPSC Thervupettagam

இந்தியாவில் நான்காவது தொழில்துறைப் புரட்சி மையம்

January 28 , 2026 4 days 32 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF), இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் உட்பட, நான்காவது தொழில்துறைப் புரட்சிக்காக ஐந்து புதிய மையங்களை அமைத்து வருகிறது.
  • இந்தியா ஏற்கனவே மும்பை மற்றும் தெலுங்கானாவில் இது போன்ற இரண்டு மையங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த மையங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தாக்கம், எரிசக்தி மாற்றம், இணையப் பாதுகாப்புத் திறன் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • இதன் நோக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைக் கட்டமைப்பு, முன்னோடித் திட்டங்களை வழங்குவது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது என்பதாகும்.
  • புதிய தொழில்நுட்பங்களின் பொறுப்பான மற்றும் பாதுகாப்பான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, இந்த வலையமைப்பு அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
  • மற்ற புதிய மையங்கள் பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்