இந்தியா, 2026 ஆம் நிதியாண்டில் 200 டன்னாக இருக்கும் அதன் நியோடைமியம் உற்பத்தியை 2027 ஆம் நிதியாண்டில் 500 டன்களாக உயர்த்த உள்ளது.
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அரசுக்குச் சொந்தமான நிறுவனமான இந்திய அருமண் தனிமங்கள் லிமிடெட் (IREL) நிறுவனமானது, அருமண் தனிமக் கூறுகளை தோண்டியெடுத்து செயல்முறை செய்கிறது.
அருமண் உலோகங்கள் மின்சார வாகனங்கள், தூய்மையான எரிசக்தி தொழில் நுட்பங்கள், பாதுகாப்புத் துறை அமைப்புகள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகின்றன.
IREL ஆனது, ஒடிசா மற்றும் கேரளாவில் தோண்டியெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு மையங்களை இயக்கி, பதினேழு அருமண் தனிமங்களில் எட்டு தனிமங்களை உற்பத்தி செய்கின்றன.
உலகளாவிய அருமண் சந்தையில் சுமார் 5 முதல் 6% வரையிலான பங்கினைக் கொண்டுள்ள இந்தியா, உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், இருப்புக்களில் ஆறாவது இடத்திலும் உள்ளது.