TNPSC Thervupettagam

இந்தியாவில் நிலம் சார்ந்த சமத்துவமின்மை

April 11 , 2026 15 hrs 0 min 27 0
  • உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின் அறிக்கையானது, கிராமப்புற இந்தியாவில் அதிக நிலப் பாகுபாடு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
  • கிராமப்புறங்களில் சுமார் 46% குடும்பங்கள் நிலமற்றவர்களாக உள்ளனர், இது மிகவும் சமமற்ற நில விநியோகத்தைக் காட்டுகிறது.
  • நிலப் பாகுபாடு கினி குறியீட்டில் (அளவு 0 முதல் 100 வரை) சுமார் 71 என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது.
  • மேல்நிலை 10% குடும்பங்கள் சுமார் 44% நிலத்தையும், மேல்நிலை 5% குடும்பங்கள் 32% நிலத்தையும், மேல்நிலை 1% குடும்பங்கள் 18% நிலத்தையும் வைத்துள்ளனர்.
  • சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 650 மில்லியன் மக்களை உள்ளடக்கிய 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு (SECC) தரவுகளை இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது.
  • சிறந்த விவசாய நிலைமைகள் மற்றும் காலனித்துவ நிலச்சுவான்தார் முறைகள் உள்ள பகுதிகளில் நிலம் குவிக்கப்பட்டிருப்பது அதிகமாக காணப்படுகிறது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) போன்ற சமூக காரணிகளால் நிலமற்றோர் விகிதம் அதிகமாக உள்ளதுடன்  சந்தை அணுகலானது சமத்துவமின்மையைக் குறைப்பதில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்