இந்தியாவில் நிலவும் தீவிர வறுமை பற்றிய உலக வங்கியின் அறிக்கை
April 20 , 2022 1202 days 603 0
உலக வங்கியின் ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 2011 ஆம் ஆண்டில் 22.5 சதவீதமாக இருந்த இந்தியாவின் தீவிர வறுமை நிலையானது 2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றிற்கு முந்தைய நிலையில் 10.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவின் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை குறைவதன் வேகம் அதிகமாக உள்ளது.
2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில், வறுமை நிலைகள் முறையே 7.9 சதவீதம் மற்றும் 14.7 சதவீதம் குறைந்து உள்ளது.
2019 ஆம் ஆண்டில், வறுமை நிலை ஆனது கிராமப்புறங்களில் 11.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.3 சதவீதமாகவும் இருந்தது.
பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ஆண்டான 2016 ஆம் ஆண்டில் நகர்ப்புற வறுமை 2 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை 10 புள்ளிகள் உயர்ந்தது.