TNPSC Thervupettagam

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகள் 2025

July 31 , 2025 2 days 24 0
  • 2023 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தில் 86,700 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • உயர் நீதிமன்றங்களில் 65.3 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.4 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
  • கடந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதனை நீதி வழங்கலைத் தடுக்கும் 'இடை நிறுத்த வழக்கு' என்று விமர்சித்தார்.
  • மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய திரௌபதி முர்மு, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நீண்டகாலப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ள 'black coat syndrome - கருப்பு அங்கி நோய்க்குறி' என்ற ஒரு சொற்றொடரை உருவாக்கினார்.
  • அவர் அதை மருத்துவமனைகளில் நோயாளிகள் உணரும் 'வெள்ளை அங்கி நோய்க் குறி'யுடன் ஒப்பிட்டார்.
  • இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.1 கோடி வழக்குகளாக உள்ளது.
  • 20,400 குற்றவியல் வழக்குகளுடன் ஒப்பிடும்போது உச்ச நீதிமன்றத்தில் சுமார் 1,300 உரிமையியல் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
  • இதற்கிடையில், நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமார் 68.3 சதவீதம் உரிமையியல் வழக்குகள் என்பதால் உயர் நீதிமன்றங்கள் இதில் இன்னும் பெரிய ஏற்றத்தாழ்வை எதிர்கொள்கின்றன.
  • இதே போல், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளில் 70 சதவீதத்தை உரிமையியல் வழக்குகளாகும்.
  • இந்த ஏற்றத்தாழ்வு, சிக்கலானச் சொத்துக்கள், குடும்பம் அல்லது வணிக தகராறுகளை உள்ளடக்கிய உரிமையியல் வழக்குகள், ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஒரு முறையான சிக்கலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • உயர் நீதிமன்றங்கள் 85.3% குற்றவியல் வழக்குகளை முடித்து வைப்பதில் முன்னிலை வகிக்கின்றன அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் (80.9%), மாவட்ட நீதிமன்றங்களும் (79.5%) உள்ளன.
  • இருப்பினும், மாவட்ட நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளைப் பொறுத்த வரையில், 2023 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 18.8% என்ற அளவு மட்டுமே தீர்த்து வைக்கப் பட்டன என்ற நிலையில், அங்கு ஆண்டுதோறும் 20% புதிய வழக்குகள் மட்டுமே தொடுக்கப்படுகின்றன என்பதோடு மேலும் சுமார் 20% என்ற அளவிலான வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அங்கு நீடிக்கின்றன.
  • மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் வழக்குகள் மிக நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றன.
  • வழக்குகளின் எண்ணிக்கைக்கும், நீதிமன்றங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.
  • இந்தியாவின் நீதித்துறைச் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்ட 27,363 பதவிகளில் 18,297 அல்லது 66.86% என்ற அளவில் மட்டும் உள்ளன.
  • இங்கு 9,065 பதவிகள் காலியாக உள்ளன இதன் விளைவாக 33% என்ற அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • உரிமையியல் வழக்குகளுக்கான பதவிகள் உட்பட காலியாக உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றப் பதவிகள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 25,771 நீதிபதிகளைக் கொண்டுள்ளன.
  • சராசரியாக 10 லட்சம் மக்கள்தொகைக்கு 18 நீதிபதிகள் வீதம் உள்ளது.
  • இது சீனாவின் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 145 நீதிபதிகள் என்ற நிலையை விடக் குறைவாகும்.
  • நீதித்துறைப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு, இந்தியா 9,065 காலியிடங்களை நிரப்ப வேண்டும். இது நிலுவையில் உள்ள வலுக்குகளைக் குறைக்க உதவும்.
  • 10 லட்சம் மக்கள்தொகைக்கு 50 நீதிபதிகள் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் இந்தியா 10 லட்சம் மக்கள்தொகைக்கு 15 நீதிபதிகளுடன் மட்டுமே செயல்படுகிறது.
  • லோக் அதாலத்கள், நடைமுறைச் சீர்திருத்தங்கள், மாற்றுத் தகராறு தீர்வு (ADR) மற்றும் எண்ணிமமயமாக்கல் ஆகியவை நீதித்துறையின் சுமையைக் குறைக்க ஒரு பயனுள்ள வழியாகும்.
  • லோக் அதாலத்கள் விரைவான, மிகவும் மலிவான மற்றும் அணுகக் கூடிய நீதியை வழங்குகின்றன.
  • மத்தியஸ்தம், நடுவர் மன்றம் மற்றும் சமரசம் போன்ற இதர பிற மாற்றுகள், பாரம்பரியமாக நீதிமன்ற அறைக்கு வெளியே தகராறுகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பொருத்தமான மாற்றுகளாகும்.
  • நிலுவையில் உள்ள 5.1 கோடி வழக்குகளுடன் ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 13.2 கோடி வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன் தேசிய லோக் அதாலத்களின் (NLA - National Lok Adalats) வெற்றி அனைத்து மட்டங்களிலும் ஒரே நேரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • NLA அமைப்புகள் சுமார் 3.34 கோடி உரிமையியல் வழக்குகளையும், 1.96 கோடி முன் விசாரணையில் இருந்த குற்றவியல் வழக்குகளையும், 3.34 கோடி நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகளையும் தீர்த்து வைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்